×

மோடிக்கு காந்தி தேசப்பிதா கோட்சே நேஷனல் ஹீரோ: அமைச்சர் மனோதங்கராஜ் விளாசல்

நாகர்கோவில்: தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கன்னியாகுமரியில் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் ஒரு இடத்தில் காந்தியை தேசப்பிதா என்பார். மற்றொரு இடத்தில் காந்தியை கொன்ற கோட்சேவை ‘நேஷனல் ஹீரோ’ என்பார். அதிமுகவை பற்றி பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மிக கடுமையான விமர்சனங்களை, அது ஒரு ஊழல் கட்சி, இந்தியாவில் ஊழலில் திளைத்த கட்சி என்று கடந்த காலங்களில் இங்கு வந்து சென்றபோது கூறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது அவர்களுக்கு இங்கு சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர்களின் தலைவர்கள் கோல்வால்கரை பற்றியோ, ஹெட்கேவரை பற்றியோ அவர்களால் சொல்ல முடியாது, அதனால்தான் அவர்கள் இங்கே எம்ஜிஆரை தூக்கிப் பிடிக்கிறார்கள்.

தமிழகத்துக்கு நிதி கேட்டபோது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆணவமாக பேசினார். 2017ல் ஜிஎஸ்டி வந்த பிறகுதான் ஒட்டுமொத்த வரியும் ஒன்றிய அரசின் பிடியில் போகிறது. ஒன்றிய அரசுக்கு வரியாக ரூ.1 கட்டினால் 29 காசுகள் திரும்ப வருகிறது. இது தான் புள்ளி விபரம். இதற்கு அவர்கள் பதில் சொல்லட்டும்.அதே ஒரு ரூபாய் கொடுக்கும் உ.பி.க்கு ரூ.2.50 காசுகள் செல்கிறது. நம்மை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார்கள். தென்மாநிலங்களில் நாம் ஜிஎஸ்டியை அள்ளிக் கொடுக்கிறோம். ஒன்றிய அரசு நம்மை வஞ்சிக்கிறது. அண்ணாமலை பாத யாத்திரையால் ஒரு தாக்கமும் வராது. இந்தி பேசும் மாநிலங்களில் இருந்துதான் அவர்கள் கூட்டத்திற்கு ஆட்களை திரட்டி வந்தார்கள். வெறுப்பு பிரசாரங்கள் பாஜ ஆளும் மாநிலங்களில் இருந்து வருவதாக தெளிவான அறிக்கை வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மோடிக்கு காந்தி தேசப்பிதா கோட்சே நேஷனல் ஹீரோ: அமைச்சர் மனோதங்கராஜ் விளாசல் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Modi ,Minister ,Manothankraj Vilasal ,Nagercoil ,Tamil Nadu ,Dairy Minister ,Manothangaraj ,Kanyakumari ,Godse ,Amit Shah ,AIADMK ,Gandhi Desapita Godse ,
× RELATED தமிழர் மொழி, பண்பாட்டை மோடி அல்ல;...