×

அமெரிக்காவை உருவாக்கியவர் ஒரு கருப்பினப் பெண்: கூகுள் நிறுவனத்தின் செயலி அளிக்கும் பதில்களால் நெட்டிசன்கள் கொதிப்பு

வாஷிங்க்டன்: கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜெமினி என்ற செயற்கை நுண்ணறி செயலியில் வெளியான இன வேற்றுமையை ஊக்குவிக்கும் வகையிலான புகைப்படங்கள் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு பொறுப்பேற்று கூகுள் சி.ஈ.ஓ சுந்தர்பிச்சை தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு செயலுக்கு போட்டியாக பார்ட் என்ற செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஒரு வாரத்திற்கு முன்பு பார்ட் செயலி ஜெமினி ஏ.ஐ. என்று பெயர் மற்றம் செய்யப்பட்டது. இதில் ஏற்கனவே பல்வேறு குறைபாடுகள் இருந்ததாக புகார் எழுந்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இதன் புகைப்பட உருவாக்க நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது.

அமெரிக்காவை நிர்மாணித்தவர் ஒரு கறுப்பினத்தவ பெண் என்றும் ஹிட்லரின் நாஜிப்படையில் கறுப்பினத்தவர்களும், ஆசிய நடுப்பகுதிகளை சேர்ந்தவர்களும் இருந்தனர் எனவும் புகைப்படங்களாக காட்டியது. இந வேற்றுமையை விதைக்கும் இந்த புகைப்படங்களுக்கு உலகம் முழுவதுமிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த தவறுக்கு பொறுப்பேற்று தனது பதவியை சுந்தர் பிச்சை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மோடி சர்வாதிகாரியா என்ற கேள்விக்கு ஆமோதிப்பது போன்ற ஜெமினி ஏ.ஐ.க்கு எதிராக இந்தியா நோட்டீஸ் அனுப்பலாம் என தெரிகிறது. டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஆகியோர் சர்வாதிகாரிகளா என்ற கேள்விக்கு அதை ஏற்காத வகையில் தெளிவற்ற ஒரு பதிலை அளித்தது. இதற்கிடையே ஜெமினி ஏ.ஐ.யில் ஏற்பட்டுள்ள தவறுகளை ஒரு போதும் ஏற்க முடியாது என்று தனது ஊழியர்களுக்கு கடிதம் மூலம் கூகுள் சி.ஈ.ஓ சுந்தர்பிச்சை எச்சரித்துள்ளார்.

The post அமெரிக்காவை உருவாக்கியவர் ஒரு கருப்பினப் பெண்: கூகுள் நிறுவனத்தின் செயலி அளிக்கும் பதில்களால் நெட்டிசன்கள் கொதிப்பு appeared first on Dinakaran.

Tags : America ,Google ,WASHINGTON ,CEO ,Sunderbich ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...