×

பயணி உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 30 லட்சம் அபராதம்

மும்பை : மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி வழங்க கால தாமதம் ஏற்பட்டதால் 80 வயது பயணி உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நியூயார்க்கில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த வயதான தம்பதியினர் வந்துள்ளனர். 2 சக்கர நாற்காலிகளை வயதான தம்பதினர் இணையதளத்தின் மூலம் முன்கூட்டியே பதிவு செய்திருந்தனர். அதிக கூட்டம் காரணமாக, வயதான தம்பதியருக்கு 2 சக்கர நாற்காலிகளில் ஒன்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 80 வயதான முதியவர் ஒரு சக்கர நாற்காலியில் தனது மனைவியை அமர வைத்துவிட்டு 1.5 கி.மீ. வரை நடந்து சென்றுள்ளார். விமானநிலைய நுழைவு வாயில் திடீரென மயங்கி விழுந்து முதியவர் உயிரிழந்தது சர்ச்சையானது.

The post பயணி உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ. 30 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Air India ,Mumbai ,Air Transport Regulatory Commission ,New York ,Dinakaran ,
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...