×

ஓடு பாதையில் ஓடிக் கொண்டிருந்த போது திடீரென நிறுத்தப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்!!

சென்னை : சென்னையில் இருந்து பாரீஸ் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய ஓடு பாதையில் ஓடிக் கொண்டிருந்த விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. நீண்ட நேரமாகியும் விமானம் பழுது பார்க்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள், ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ரத்து செய்யப்பட்ட விமானம் நாளை அதிகாலை புறப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

The post ஓடு பாதையில் ஓடிக் கொண்டிருந்த போது திடீரென நிறுத்தப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம்!! appeared first on Dinakaran.

Tags : Air France ,Chennai ,Paris ,Chennai Airport ,
× RELATED இன்னும் 100 நாட்கள்!: பாரிஸ் ஒலிம்பிக்...