×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 இடங்களில் மழைமானி, வானிலை மையம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், பிப். 28: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 18 இடங்களில் மழைமானி மற்றும் வானிலை மையம் அமைய இருப்பதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவ காலங்களில் ஏற்படும் மழைபொழிவை துல்லியமாகவும், பேரிடர் காலங்களில் ஏற்படும் வெள்ளம், வறட்சி, போன்றவற்றை நுண்ணிய பகுப்பாய்வு மூலம் அறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் ஒவ்வொரு குறுவட்ட அளவிலும் தினசரி மழைபொழிவு தரவை பெறுவதற்காக கீழ்காணும் 18 இடங்களில் தானியங்கி மழைமானி மற்றும் 3 இடங்களில் தானியங்கி வானிலை மையம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

தானியங்கி மழைமானி பொருத்தப்படும் அமைவிட விவரமாறு: காஞ்சிபுரம்-சிறுகாவேரிபாக்கம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகம் சிறுகாவேரிபாக்கம், காஞ்சிபுரம்-பரந்தூர் விதை சேமிப்பு கிடங்கு வளாகம், காஞ்சிபுரம்-கோவிந்தவாடி கிராம சேவை கட்டிட வளாகம், கொட்டவாக்கம், காஞ்சிபுரம்-சிட்டியம் பாக்கம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகம், சிட்டியம்பாக்கம்-வாலாஜாபாத் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மாகரல், வாலாஜாபாத்-தென்னேரி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு வளாகம் தென்னேரி, உத்திரமேரூர்-திருப்புலிவனம் குறுவட்ட நில அளவர் குடியிருப்பு, உத்திரமேரூர்-வேடபாளையம் பொ.ப.து. ஆய்வு மாளிகை வளாகம், வேடபாளையம், உத்திரமேரூர்-திருமுக்கூடல் நெல் கொள்முதல் நிலைய வளாகம், திருமுக்கூடல், உத்திரமேரூர்-வாடாதவூர் கிராம நிர்வாக அலுவலர் வளாகம், வாடாதவூர், பெரும்புதூர் பொ.ப.து கட்டிடம் வளாகம் திருப்பெரும்புதூர் ஆகிய இடங்களில் அமையவுள்ளன.

மேலும், திருப்பெரும்புதூர்-மதுரமங்கலம், பள்ளி கட்டிடம் வளாகம் மதுரமங்கலம், பெரும்புதூர்-தண்டலம் பள்ளி கட்டிடம் வளாகம் தண்டலம் குன்றத்தூர், படப்பை-சோமங்கலம் அரசு உயர்நிலை பள்ளி வளாகம் சோமங்கலம், குன்றத்தூர்-கொளப்பாக்கம் அரசு உயர்நிலை பள்ளி வளாகம் கொளப்பாக்கம், பெரும்புதூர்-மண்ணூர் நூலக கட்டிட வளாகம் மண்ணூர், காஞ்சிபுரம்-கிளார் அங்கன்வாடிமையம் கிளார், உத்திரமேரூர்-பென்னலூர் சமுதாயகூடம் பென்னலூர், தானியங்கி வானிலை மையம் அமைவிட விவரம் வருமாறு: பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம் பெரும்புதூர், வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் வாலாஜாபாத், உத்திரமேரூர்-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வளாகம் வேடப்பாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 இடங்களில் மழைமானி, வானிலை மையம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram District ,Meteorological ,Kanchipuram ,Collector ,Kalachelvi ,District ,Collector Kalaichelvi ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...