×

பேரவையில் பாக். ஆதரவு கோஷம் காங்கிரஸ் எம்பி மீது வழக்கு: கர்நாடகாவில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபையில் நேற்று முன் தினம் நடந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆளும் காங்கிரஸ் மூன்று, பாஜ ஒரு இடங்களை கைப்பற்றின. இவற்றில் காங்கிரஸ் வேட்பாளர் நசீர் உசேன் வெற்றி பெற்றதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் சிலர் மாநில சட்டப் பேரவையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று பாகிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பியதாக சர்ச்சை எழுந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவை காவல் நிலைய போலீசார் தாமாக முன்வந்து நசீர் உசேன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பேரவையில் பாதுகாப்பு பணியில் இருந்த உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், நசீர் உசேன் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

The post பேரவையில் பாக். ஆதரவு கோஷம் காங்கிரஸ் எம்பி மீது வழக்கு: கர்நாடகாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bach ,Congress ,Karnataka ,Bengaluru ,Rajya Sabha ,Karnataka State Assembly ,BJP ,Naseer Hussain ,Dinakaran ,
× RELATED டிக்கெட் கிடைக்காததால் எந்த...