×

போலி ஐடி உருவாக்கி பல லட்சம் மோசடி செய்த துணை நடிகர் கைது: பெண் புகாரின் பேரில் நடவடிக்கை

திருமலை: சமூக வலைத்தளத்தில் போலி ஐடி உருவாக்கி அதில் பல லட்சம் பணம் மோசடி செய்த துணை நடிகரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஷாங்கிரெட்டி (24), தெலுங்கு படங்களில் துணை நடிகராக உள்ளார். இவர், போலி ஐடி மூலம் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பலருக்கு பிரண்ட்ஸ் ரிக்வஸ்ட் அனுப்புவது வழக்கம். அவ்வாறு விசாகப்பட்டினத்தை சேர்ந்த மேக்னாரகுபத்ரா என்ற பெண், இவரது பிரண்ட் ரிக்வஸ்ட் ஏற்று கொண்டுள்ளார்.

அதன்பிறகு இருவரும் சாட் செய்துள்ளனர். அவ்வாறு பழகி வந்த நிலையில், ஷாங்கிரெட்டி, தனக்கு மருத்துவ செலவு என்றும் தனது தாயார் திடீரென இறந்து விட்டார். இறப்பு செலவு என்பது உள்பட பல்வேறு காரணங்களை கூறி ஆன்லைன் மூலம் மேக்னாரகுபத்ராவிடம் இருந்து அடிக்கடி பணம் வாங்கியுள்ளார். இவ்வாறு ரூ.1.05 லட்சத்திற்கு மேல் வாங்கியுள்ளார்.

சிறிது நாட்களுக்கு பிறகு, தான் கொடுத்த பணத்தை மேக்னா கேட்டுள்ளார். அதற்கு ஷாங்கிரெட்டி, தற்போது பண நெருக்கடியில் இருப்பதாகவும் விரைவில் பணத்தை முழுவதுமாக திருப்பி தந்து விடுகிறேன். என்னை நம்புங்கள்’ என்று கூறி இழுத்தடித்துள்ளார். அவர் பணம் தராமல் ஏமாற்றுவதை அறிந்த மேக்னாரகுபத்ரா, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், செல்போன் எண் மற்றும் இதர தொழில்நுட்பங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி, போலி ஐடி பெயரில் ஷாங்கிரெட்டி மோசடி செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை நேற்று கைது செய்தனர். இதேபோல் பலரிடம் பழகி லட்சக்கணக்கான பணம் மோசடி செய்திருக்கலாம் என தெரிகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலி ஐடி உருவாக்கி பல லட்சம் மோசடி செய்த துணை நடிகர் கைது: பெண் புகாரின் பேரில் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Shangretty ,Visakhapatnam ,Andhra Pradesh ,
× RELATED திருமலையில் காற்றுடன் கனமழை: பக்தர்கள் மகிழ்ச்சி