×

தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைப்படி 17 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைப்படி 17 டிஎஸ்பிக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்டம் பெரியகுளம் டிஎஸ்பி நல்லு, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டிஎஸ்பியாகவும், சென்னை பெரவள்ளூர் உதவி கமிஷனர் பரமானந்தம், திருமங்கலம் உதவி கமிஷனராகவும், அந்தப் பதவியில் இருந்த வரதராஜன், எம்கேபி நகர் உதவி கமிஷனராகவும், கடலூர் மாவட்டம் நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா, மதுரை அண்ணாநகர் உதவி கமிஷனராகவும், திருச்சி கண்டோன்மென்ட் உதவி கமிஷனர் பாஸ்கர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டிஎஸ்பியாகவும், காஞ்சிபுரம் டிஎஸ்பி மணிமேகலை, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி முரளி, காஞ்சிபுரம் டிஎஸ்பியாகவும், மதுரை அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரகுமாரன், தேனி மாவட்டம் பெரியகுளம் டிஎஸ்பியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை திலகர் நகர் உதவி கமிஷனர் மகேஷ், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிஎஸ்பியாகவும், மதுரை கோவில் சரக உதவி கமிஷனர் காமாட்சி, மதுரை திலகர் நகர் உதவி கமிஷனராகவும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பி தமிழ்மாறன், அரியலூர் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாகவும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டிஎஸ்பி கோவிந்தசாமி, கடலூர் மாவட்டம் நெய்வேலி டிஎஸ்பியாகவும், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டிஎஸ்பி நாகராஜன், மதுரை கோயில் நகர உதவிக மிஷனராகவும், தஞ்சாவூர் பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன், திருச்சி கண்டோன்மென்ட் உதவி கமிஷனராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணக்குமார், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பால் ஸ்டீபன், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும், காஞ்சிபுரம் க்யூ பிரிவு டிஎஸ்பி சாந்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பியாகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 3 ஆண்டுகள் மற்றும் சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைப்படி 17 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,TGB ,Sankar ,Chennai ,Sankar Jival ,Theni District ,Peryakulam ,DSP ,Nallu ,Tiruvannamalai ,District Bolur ,Perawallur ,TGB Sankar ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...