×

பரமக்குடியில் கொள்ளை வழக்கு: 6 ஆண்டுகளுக்கு பிறகு வடமாநில இளைஞர் கைது

பரமக்குடி: பரமக்குடியில் பெண் மருத்துவரை கட்டி போட்டு கொள்ளையடித்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பரமக்குடி மணி நகரில் பாலச்சந்தர்-கிருஷ்ணவேணி என்ற மருத்துவ தம்பதி வசித்து வருகின்றனர். 2018-ம் ஆண்டு 4 பேர் கொண்ட மர்மகும்பல் கிருஷ்ணவேணியை கட்டிப்போட்டு நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்றது. கைரேகை பிரிவு போலீசார் உதவியுடன் அவுரங்காபாத்தை சேர்ந்த அனிக்கோட் என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூன்று குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். வடமாநில இளைஞர் அனிக்கோட்டை பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பரமக்குடியில் கொள்ளை வழக்கு: 6 ஆண்டுகளுக்கு பிறகு வடமாநில இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,North state ,Balachander-Krishnaveni ,Paramakudi Mani Nagar ,Paramakkudi ,
× RELATED மகளை திருமணம் செய்து கொடுக்காததால்...