- மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- ஆர்.எஸ்.பார்தி
- ஆலந்தூர்
- திமுக
- சென்னை ஆலந்தூர்
- வடக்கு
- தெற்கு
- Nanganallur
- பிராந்தியம்
- பி.குணாலன்
- என்.சந்திரன்
- தொகுதி தேர்தல் அலுவலர்
- நரேந்திரன்
- ரூ
- பாரதி
- தின மலர்
ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் வடக்கு, தெற்கு பகுதி திமுக பாக முகவர்கள் மற்றும் பாக பொறுப்பாளர்கள் கூட்டம் ஆலந்தூர், நங்கநல்லூர் பகுதிகளில் நடைபெற்றது. இதற்கு வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், தெற்கு பகுதி செயலாளர் என்.சந்திரன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நரேந்திரன், வட்ட செயலாளர்கள் கே.பி.முரளிகிருஷ்ணன், ஜெ.நடராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் வரவேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான தா.மோ அன்பரசன் பேசியதாவது; திமுக அரசின் சாதனைகளை விளக்கும் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தை பாகமுகவர்கள் தொடங்கவேண்டும். பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் பாஜ எந்த அளவுக்கு தொல்லை கொடுக்கமுடியுமோ அந்த அளவுக்கு தொல்லை கொடுப்பார்கள். தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை வேகமாக தேர்தல் வேலை செய்பவர்களை முடக்கும் வேலையையும் அவர்கள் செய்வார்கள்.
அதையெல்லாம் எதிர்த்து நாம் தேர்தலில் வெற்றிபெறவேண்டும். மோடி கொண்டுவரும் மக்கள் விரோத திட்டங்களுக்கு முதல் கண்டன தீர்மானம் போட்ட ஒரே தலைவர் நமது தலைவர் மட்டுமே. அண்ணா, கலைஞர் ஆட்சியை விட கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். இவ்வாறு பேசினார்.
* இந்த கூட்டத்தில், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது;
கடந்த 75 ஆண்டுகளில் யாரும் சமர்ப்பிக்க முடியாத பட்ஜெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமர்ப்பித்து உள்ளார். இதனை அனைத்து பத்திரிகைகளும் பாராட்டியுள்ளது. நமது முதலமைச்சரை கண்டு பயந்து பிரதமர் மோடி, அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். நமது முதலமைச்சரை முடக்கிவிட்டால் இந்தியா அணியை முடக்கிவிடலாம் என்று மோடி கருதுகிறார். இதனால்தான் வாரம் ஒருமுறை தமிழ்நாட்டிற்கு மோடி வருகிறார். இவ்வாறு பேசினார்.
இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் இரா.பாஸ்கரன், எம்எஸ்கே. இப்ராகிம், ஆர்.டி. பூபாலன், கீதா ஆனந்தன், வர்த்தக அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன், துணை அமைப்பாளர்கள் மீன் மோகன், கேபிள் ராஜா, பிரான்சிஸ், வட்ட செயலாளர்கள் செல்வேந்திரன், டி.ரவி, கருணாநிதி, சீனிவாசன், உலகநாதன், ஏசுதாஸ் சாலமோன், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், வேலவன், மாவட்ட மகளிரணி விஜயலட்சுமி, நிர்வாகிகள் கோ. பிரவீன்குமார், வி.ராஜா, குமார், தீபக், கார்த்திக், கே.கே.சண்முகம், விக்னேஷ், விஜய் பாபு சதீஷ், எஸ்.காஜாமொய்தீன், தீனன், விக்கி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பயந்து மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு appeared first on Dinakaran.