×

ரூ.9.17 கோடி செலவில் 2 வட்ட செயல்முறை கிடங்குகள்,4 நிரந்தர நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 27.02.2024 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 6.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 நிரந்தர நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கட்டப்படவுள்ள 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 மாவட்டங்களில் 40 எண்ணிக்கையிலான மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளங்கள் மற்றும் 27.50 கோடி ரூபாய் மதிப்பிலான 6 வட்ட செயல்முறை கிடங்குகள் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 2 வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் 4 நிலையங்களை திறந்து வைத்தல் நிரந்தர நேரடி நெல்கொள்முதல்

தமிழ்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பினை வட்ட அளவில் உறுதி செய்யவும், பொது விநியோகத் திட்டத்தின் பயன்பாட்டிற்கான தானியங்களின் சேமிப்பிற்கான கொள்ளளவினை மேம்படுத்தும் விதமாகவும், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டத்தில் 4.02 கோடி ரூபாய் செலவில் 2000 மெ.டன், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தில் 2.65 கோடி ரூபாய் செலவில் 2000 மெ.டன், மொத்தம் 6.67 கோடி ரூபாய் செலவிலான 4000 மெ.டன் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள 2 வட்ட செயல்முறைக் கிடங்குகள்: செங்கல்பட்டு மாவட்டம் தொன்னாடு, காஞ்சிபுரம் மாவட்டம் மருதம், திண்டுக்கல் மாவட்டம் – சித்தரேவு மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் உஞ்சியவிடுதி ஆகிய கிராமங்களில் தலா 250 மெ.டன் கொள்ளளவுடன் மொத்தம் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்; என மொத்தம் 9 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

6 மாவட்டங்களில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளங்கள் மற்றும் 6 வட்ட செயல்முறை கிடங்குகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுதல்

விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தி ஆகும் நெல்லைக் கொள்முதல் செய்து அரவைக்கு அனுப்புவதில் ஒரு நெல்மணி கூட வீணாகக்கூடாது என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையினை செயல்படுத்திடும் விதமாக, 2,86,350 மெ.டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் மொத்தம் 238.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவ பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து சேமிப்பு தளங்களும்  பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்டம், கொத்தங்குடியில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9000 மெ.டன், மற்றும் நீலத்தநல்லூரில் 8.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13,500 மெ.டன், திருவாரூர் மாவட்டம், மூவாநல்லூரில் 20.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 33,000 மெ.டன், கடலூர் மாவட்டம், டி.புடையூரில் 9.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9500 மெ.டன். செங்கல்பட்டு மாவட்டம், சிலாவட்டத்தில் 14.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15,000 மெ.டன், காஞ்சிபுரம் மாவட்டம், கட்டவாக்கத்தில் 14.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15,000 மெ.டன், மதுரை மாவட்டம். திருவாதவூரில் 14.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15,000 மெ.டன் மற்றும் வாடிப்பட்டியில் 6.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7000 மெ.டன் கொள்ளளவு, என மொத்தம் 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.17 இலட்சம் மெ.டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள 40 எண்ணிக்கையிலான மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன
நெல்சேமிப்பு தளங்கள்:

பொது விநியோகத் திட்டத்தினை திறம்பட செயல்படுத்திடும் விதமாக திருவள்ளூர் மாவட்டம். இராமகிருஷ்ணராஜ்பேட்டை வட்டத்தில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெ. டன், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3000 மெ. டன், நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2500 மெ. டன், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டத்தில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெ.டன். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தில் 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3000 மெ. டன் மற்றும் மதுரை மேற்கு வட்டத்தில் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2500 மெ.டன், என மொத்தம் 27.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 15,000 மெ.டன் கொள்ளளவுடன் கட்டப்படவுள்ள 6 வட்ட செயல்முறைக் கிடங்குகள்:என மொத்தம் 122.50 கோடி மதிப்பில் 6 மாவட்டங்களில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளங்கள் மற்றும் 6 வட்ட செயல்முறை கிடங்குகள் கட்டும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

The post ரூ.9.17 கோடி செலவில் 2 வட்ட செயல்முறை கிடங்குகள்,4 நிரந்தர நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : K. Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Shri. ,M. K. Stalin ,Tamil Nadu Consumer Goods Purchasing Corporation ,TMC ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...