சென்னை : விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயத்தை தொடங்க வாழ்த்துகள் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “இஸ்ரோவின் கனவுத் திட்டங்களில் ஒன்றான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்ல தேர்வாகியிருக்கும் குருப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபன்சூ சுக்லா ஆகியோருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்ரோவின் முக்கிய திட்டங்களான சந்திரயான் மற்றும் ஆதித்யா எல்.1 திட்டங்களில் தமிழர்களின் பங்களிப்பு இருந்ததை போலவே ககன்யான் திட்டத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் அவர்கள் இடம்பெற்றிருப்பது தமிழர்கள் அனைவரையும் பெருமையடையச் செய்திருக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து நான்காவது நாடாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை படைப்பதோடு, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயத்தை தொடங்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post ” ககன்யான் திட்டம் : தமிழர்கள் அனைவரையும் பெருமையடையச் செய்திருக்கிறது” : டிடிவி தினகரன் வாழ்த்து appeared first on Dinakaran.