×

தொப்பூர் கணவாயில் லாரி பிரேக் பிடிக்காமல் முன் சென்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து!

தருமபுரி: தொப்பூர் கணவாயில் சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி, முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. லாரி பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற கார் உள்ளிட்ட 5 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டத்திலுள்ள தொப்பூர் கணவாயில் கடந்த 12 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. தொப்பூரில் ஆண்டுதோறும் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. தொப்பூர் கணவாய் கொலைகார கணவாய் எனவும் அழைக்கப்படுகிறது.

தொப்பூர் கணவாய் பகுதியில் அமானுஷ்ய சக்தி காரணமாக தான் அதிகளவில் விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமாவாசை நாட்களில் கணவாய் பகுதிகளில் அமானுஷ்ய சக்தி அதிகளவில் உலாவுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதானால் தான் விபத்துகளும் ஏற்படுவதாக நம்புகின்றனர். இதன் காரணமாக அமாவாசை நாட்களில் வாகன போட்டிகளில் தொப்பூர் கணவாய் பகுதி வழியே செல்ல அஞ்சுகின்றனர்.

இந்நிலையில் தொப்பூர் கணவாயில் சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி, முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. லாரி பிரேக் பிடிக்காமல் முன்னால் சென்ற கார் உள்ளிட்ட 5 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. லாரி மோதிய விபத்தில் 2 கார்கள் நொறுங்கின. விபத்து தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொப்பூரில் சரக்கு லாரி ஒன்று டோல் டிராபிக்கில் நின்று கொண்டு இருந்த 13 வாகனங்கள் மீது வரிசையாக மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

The post தொப்பூர் கணவாயில் லாரி பிரேக் பிடிக்காமல் முன் சென்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து! appeared first on Dinakaran.

Tags : Toppur pass ,Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...