×

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ பிரசாரம்

நெல்லை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் திண்ணை பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்கும் நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று தமிழக அரசின் சாதனைகள் விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் நெல்லை,தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுக சார்பில் திண்ணை பிரசாரம் தீவிரமாக நடந்துவருகிறது.நெல்லை மாவட்டம், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் ஆரோக்கிய எட்வின் தலைமையில் காடன்குளம் ஊராட்சி பார்பரம்மாள்புரம், பதக்கம் கிராமங்களில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்னும் திண்ணை பிரசாரத்தில் கட்சியினர் ஈடுபட்டனர்.

இதில் அவைத்தலைவர் செல்லதுரை, ஒன்றிய பொருளாளர் வின்சென்ட், மாவட்ட பிரதிநிதி ராஜக்கண், புதுவேம்பு , ஒன்றிய மகளிர் அணி புஷ்பா, ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் பலவேசம், மாடசாமி, சுந்தர், லிங்கம் ,புஷ்பராஜ், பாலகிருஷ்ணன், அரசு ஒப்பந்ததாரர் சுடர், ஒன்றிய துணைச் செயலாளர் ராதா மனோகர், முகேஷ், பினகஸ், கிளைச் செயலாளர் ஜெரோசின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நாங்குநேரி யூனியன், சிங்கநேரி ஊராட்சி, காரங்காடு கிராமத்தில் நாங்குநேரி மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். சுடலைக்கண்ணு தலைமையில் திமுகவினர் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை விநியோகித்து விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்டப் பிரதிநிதி எஸ்.கே. ஆறுமுகம், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாயகிருஷ்ணன், விளையாட்டு மேம்பாட்டு அணி ஒன்றிய அமைப்பாளர் வர்கீஸ், விவசாயத் தொழிலாளர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர் செபஸ்தியார், மகளிர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் செல்வி, ரெஜினாள், மகளிர் தொண்டர் அணி ஒன்றிய துணை அமைப்பாளர்கள் பார்வதி, பிரிஸ்கில்லா, கிளைச் செயலாளர்கள் கிட்டு கோனார், மாசானம் டேவிட், கிளை நிர்வாகிகள் சந்தனகுமார், சப்பானி சிவா, ரீகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக அனைத்து வீடுகளிலும் அரசின் சாதனை விளக்க ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

தென்காசி: தென்காசி அடுத்த மேலகரத்தில் பேரூர் திமுக சார்பில் நடந்த ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற திண்ணை பிரசார நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூர் செயலாளர் சுடலை தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் அழகுசுந்தரம், பேரூர் துணைச் செயலாளர்கள் ஜீவானந்தம், கந்தசாமி முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், மேலகரம் பேரூராட்சி பாரதிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாகச் சென்று தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட பிரதிநிதிகள் சுந்தரம் என்ற சேகர், சம்முகுட்டி என்ற சண்முகம், ஒன்றிய துணைச் செயலாளர் ஐடிஐ ஆனந்த், சுந்தர்ராஜன், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய பிரதிநிதிகள் ஈனமுத்து பாண்டியன், கபிலன், அவைத்தலைவர் சலீம், கல்யாணசுந்தரம், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், பூபதி, சந்திரன், பேச்சாளர் ஆயிரப்பேரி முத்துவேல், பாலசுப்பிரமணியன், பாலு, குத்தாலிங்கம், குருசாமி, சூர்யா மணி என்ற ஈஸ்வரன், மனோஜ், ஐடி விங் விக்னேஷ், மாரி, இளைஞர் அணி அருண், கருப்பசாமி, பொன்ராஜ், ஆறுமுகம், கதிர், ஹரி, பவுல் மற்றும் சார்பு அணியினர், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே கம்பனேரி ஊராட்சிக்கு உட்பட்ட வலசையில் ஒன்றிய திமுக சார்பில் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற திண்ணை பிரசாரத்தை முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை தலைமையில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆவின் ஆறுமுகம் துவக்கிவைத்தார். ஒன்றியச் செயலாளர் சுரேஷ் வரவேற்றார்.

இதில் கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் முருகன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் முகையதீன் கனி, சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் சுதாகர், திரிகூடபுரம் பஞ். துணைத்தலைவர் மீரான், பால அருணாசலபுரம் செயலாளர் கருப்பசாமி, மூக்கையா, வார்டு செயலாளர் ரசாக், மதி, மாரியப்பன், முதலியான்கான், முருகானந்தம் பங்கேற்றனர். இவர்கள் பிள்ளையார் கோவில் தெரு, பள்ளிவாசல் தெரு, மேட்டுத் தெரு, வடக்கு காலனி தெரு, ஜக்கம்மாள் கோவில் தெரு, பண்ணை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதிவீதியாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பிரசாரம் மேற்கொண்டனர்.

கேடிசிநகர்: மானூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கங்கைகொண்டான் ஊராட்சி பகுதியில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் பிரசார நிகழ்ச்சி ஒன்றியச் செயலாளர் அருள்மணி தலைமையில் நடந்தது. நெல்லை மத்திய மாவட்ட துணைச் செயலாளர் கிரிஜாகுமார் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி துவக்கிவைத்தார்.

இதில் இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மிக்கேல், ஒன்றிய துணைச்செயலாளர் இசக்கியம்மாள், காளியப்பன், மாயாண்டி, வேல்ராஜ், கிளைச் செயலாளர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பாக முகவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

The post நெல்லை, தென்காசி மாவட்டத்தில் ‘இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல்’ பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Nellai, Tenkasi district ,Nellai ,DMK ,Tamil Nadu ,Dravida model government ,Chief Minister ,Stalin ,Dinakaran ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!