×

தஞ்சாவூர் ராஜகோரி மயானத்தில் சவுராஷ்ட்ரா காத்திருப்போர் கூடம்

தஞ்சாவூா், பிப்.28:தஞ்சாவூர் ராஜகோரி மயானத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சௌராஷ்ட்ரா காத்திருப்போர் கூடத்தை எம்.எல்.ஏ.துரை.சந்திரசேகரன் திறந்து வைத்தார். தஞ்சாவூர் ராஜகோரி மயானத்தில் இறந்தவர்களின் காரியங்கள் செய்வதற்காக காத்திருப்போர் கூடம் வேண்டும் என்று சௌராஷ்டிரா இன மக்கள் எம்.எல்.ஏ.விடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தஞ்சை மாநகராட்சி வடக்கு வாசலில் உள்ள ராஜகோரி மயானத்தில் காத்திருப்போர் கூடம் அமைக்க தஞ்சாவூா் தொகுதி எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.அதனை தொடர்ந்து 465 சதுர அடி பரப்பளவில் சவுராஷ்ட்ரா காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டது.

பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது.காத்திருப்போர் கூடத்தை எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.நிகழ்ச்சிக்கு டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். மேயர் சண் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி, மாநகர பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் மனோகரன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், ஆனந்தி, மண்டல குழு தலைவர் புண்ணியமூர்த்தி, கவுன்சிலர்கள் நீலகண்டன், உஷா, தமிழ்வாணன், அண்ணா பிரகாஷ், சுந்தர செந்தில், ஆனந்த், சவுராஷ்டிரா சங்க தலைவர் அசோகன்,தி.மு.க பகுதி செயலாளர்கள் சதாசிவம், கார்த்திகேயன்,பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் ராஜகோரி மயானத்தில் சவுராஷ்ட்ரா காத்திருப்போர் கூடம் appeared first on Dinakaran.

Tags : Saurashtra Waiting Hall ,Thanjavur Rajagori Cemetery ,Thanjavur ,MLA ,Durai Chandrasekaran ,Saurashtra ,MLA Constituency Development Fund ,Rajagori Cemetery ,Saurashtra Waiting Room ,Dinakaran ,
× RELATED தஞ்சையில் அறுவடை செய்த வயல்களில் வாத்து மேய்க்கும் பணி மும்மரம்