×

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ₹12.27 கோடியில் கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில்₹12.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ₹ 12 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 2 கோட்டாட்சியர் குடியிருப்புகள், 1 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், 1 வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, 4 வட்டாட்சியர் குடியிருப்புகள், 13 குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், 1 கிராம நிருவாக அலுவலகக் கட்டடம் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் ₹3 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், திருவள்ளூர் மாவட்டம்- கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில் ₹1 கோடியே 44லட்சத்து 31 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வட்டாட்சியர் குடியிருப்புகள். செங்கல்பட்டு மாவட்டம் – சித்தாமுர், லத்தூர் மற்றும் பம்மல், திருவள்ளூர் மாவட்டம் – நேமம், வானகரம் மற்றும் வயலாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் 2 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர ₹ 12 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வருவாய்த் துறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ. அன்பரசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ₹12.27 கோடியில் கட்டப்பட்ட கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Department of Revenue and Disaster Management ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu Government ,Chief Secretariat, Revenue and Disaster ,
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்