×

டெல்லிக்கே ராஜான்னாலும் எங்களுக்கு பாஜ ‘கூஜா’தான்: சல்லி சல்லியா நொறுக்கிட்டாரே கடம்பூர் ராஜூ

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பேசுகையில், ‘தமிழகத்தில் பாஜ ஒரு பொருட்டே இல்லை. டெல்லிக்கு அவர்கள் (பாஜ) ராஜா என்றாலும், இங்கு அவர்கள் கூஜா தான். அதிமுகவுக்கு தேர்தல் என்பது அல்வா சாப்பிடுகிற மாதிரி. தேர்தலை கண்டு அதிமுகவுக்கு பயம் கிடையாது. பிறக்கும்போதே தேர்தலை சந்தித்த கட்சி அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா இப்போது இல்லை.

சாதாரண தொண்டன் தான் கட்சி நடத்துகிறான் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு தொண்டர் இல்லை. இரண்டரை கோடி தொண்டர்கள் வழி நடத்தும் கட்சிதான் அதிமுக. இபிஎஸ்சை சாதாரணமாக நினைக்கக் கூடாது என்று சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். பார்லி. தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் பாஜ காணாமல் போய்விடும். பாஜவிடம் நாங்கள் தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்து எடுத்துக் கூறினோம். ஆனால் பாஜ கேட்கவில்லை. அதனால் தான் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறினோம்,’என்றார்.

The post டெல்லிக்கே ராஜான்னாலும் எங்களுக்கு பாஜ ‘கூஜா’தான்: சல்லி சல்லியா நொறுக்கிட்டாரே கடம்பூர் ராஜூ appeared first on Dinakaran.

Tags : Delhi ,Sally Sallia ,Kadampur Raju ,Chief Minister ,Jayalalithaa ,minister ,MLA ,Tamil Nadu ,Baja ,Delhi Raja ,
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...