×

சின்னமனூர் அருகே கலைஞர் நூற்றாண்டு கபடி போட்டி

 

சின்னமனூர், பிப்.28: சின்னமனூர் அருகே முத்துலாபுரத்தில் தேனி தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியும், முத்துலாபுரம் மருது நினைவு கபடி குழு சார்பாக முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவையும், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் 71 வது பிறந்த நாளையும் முன்னிட்டு மாநில அளவிலான 5ம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. சின்னமனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை தலைமை வகித்தார்.

தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வசந்தன் வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். தேனி தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி இணை அமைப்பாளர்கள் சேதுராஜா,வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துலாபுரம் கிளை செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி முருகன், மாவட்ட விவசாய அணி முருகேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், திமுக நிர்வாகிகள், கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி என பல மாவட்டங்களிலிருந்து தமிழகம் முழுவதும் இருந்து 60க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்றன. வெற்றி பெற்ற கபடி அணிகளுக்கு ரூ.25 ஆயிரம் முதல் பரிசாகவும், ரூ. 20 ஆயிரம் இரண்டாம் பரிசாகவும், 15 ஆயிரம் மூன்றாம் பரிசாகவும், 10ஆயிரம் நான்காம் பரிசாகவும் வழங்கப்பட்டது. மேலும் சிறப்பு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

The post சின்னமனூர் அருகே கலைஞர் நூற்றாண்டு கபடி போட்டி appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Kabaddi Tournament ,Chinnamanur ,South District DMK Sports Development Team ,Muthulapuram ,Chief Minister ,Kandahar Centenary Celebration ,Muthulapuram Marudu Memorial Kabaddi Team ,DMK President ,Tamil Nadu ,M.K. Stalin ,Kandahar Centenary Kabaddi Tournament ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்