×

பொது மயானத்தில் உணவு கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை

 

பந்தலூர், பிப்.28: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கொளப்பள்ளி பஜாரை ஒட்டிய பகுதியில் சுற்றுவட்டாரம் பகுதியில் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கு மயானம் உள்ளது. இந்த மயானத்தில் திருமண வீட்டில் பயன்படுத்திய உணவு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அதனை உண்பதற்கு காட்டு பன்றிகள், வளர்ப்பு நாய்கள் மற்றும் வனவிலங்குகள் வருவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றது.

சில நேரங்களில் கால்நடைகள் உணவுகளை உண்டு இறக்கின்றன. எனவே, பொது மயானத்தில் உணவு கழிவுகள், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொது மயானத்தை சுற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொது மயானத்தில் உணவு கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Kolappally Bazar ,Cherangode Panchayat ,Bandalur, Nilgiris District ,Dinakaran ,
× RELATED பந்தலூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா