×

இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரசாரம்: அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்

 

மதுரை, பிப்.28: மதுரையில் \”இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரசாரத்தை\” அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சி வார்டு 6 மூன்றுமாவடி மகாலட்சுமி நகரில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் எனும் திண்ணைப் பிரசாரத்தை துண்டு பிரசுரங்களை வழங்கி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் மகளிர் இலவசமாக டவுன் பஸ்களில் பயணம் செய்வதை எடுத்துக் கூறினார்.

மேலும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1.15 கோடி கலைஞர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் சாதனைத் திட்டத்தையும் எடுத்துக் கூறினார். இதுதவிர முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேரடியாக வீட்டிற்கு இணைப்பு கொடுக்கும் பணிகள் முடிந்ததை நினைவுகூர்ந்து பிரசாரம் செய்தார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ வெங்கடேசன், பகுதி செயலாளர் மருதுபாண்டியன், கவுன்சிலர் பால் செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.

The post இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரசாரம்: அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Stalin ,Minister ,P. Murthy ,Madurai ,B. Murthy ,Stalin's Door to Door Campaign ,Madurai Municipal Corporation ,Ward 6 Thrummavadi Mahalakshmi Nagar ,Commercial Tax ,
× RELATED வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன்...