×

திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம்

 

கோபி, பிப்.28: கோபி அருகே உள்ள கொடிவேரி நால் ரோட்டில் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் வாக்கு சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் எம்.சிவபாலன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் எஸ்.எல்.டி. சச்சிதானந்தம், ஈரோடு வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் பெருமாள்சாமி, வடக்கு மாவட்ட பொருளாளர் கொங்கர்பாளையம் கே.கே.சண்முகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.சுப்பிரமணியம், பெரிய கொடிவேரி பேரூராட்சி தலைவர் தமிழ்மகன் சிவா, காசிபாளையம் பேரூர் கழக செயலாளர் பழனிச்சாமி, காசிபாளையம் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக முகவர்கள் ஆலோசனை கூட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Agents Consultative Meeting Artist Women Rights Special Camp ,Gobi ,TN Palayam Union ,Kodiveri Nal Road ,DMK Agents Consultation ,Meeting ,Artist Women Rights ,Special ,Camp ,Dinakaran ,
× RELATED திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு