×

தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024-2025ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. அதன்படி, 29.2.2024 நள்ளிரவு 11.59 முடிய www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2024-2025ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

The post தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram District ,Collector ,Kalachelvi Mohan ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...