×

கல்லூரி மாணவி மாயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் மகள் பவித்ரா (21). இவர், காஞ்சிபுரம் தனியார் பெண்கள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.காம் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்ட பவித்ராவை அவரின் தந்தை கல்லூரியில் விட்டுவிட்டு வந்துள்ளார். மாலை வீட்டுக்கு அழைத்து வரச் சென்றபோது, பவித்ரா கல்லூரியில் வகுப்புக்கு செல்லவில்லை என்று தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தந்தை புருஷோத்தமன் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த விஷ்ணு காஞ்சி போலீசார், கல்லூரிக்கு சென்று மாயமான மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Kanchipuram ,Pavithra ,Purushottaman ,Pilliyarpalayam ,Kanchipuram Private College ,Pavitra ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் மாயம்