×

ஊத்துக்கோட்டை பகுதியில் மண் பானை செய்யும் பணி தீவிரம்

ஊத்துக்கோட்டை: வரும் மே மாதம் 4ம்தேதி முதல் 28ம்தேதி வரை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே தற்போது வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படுகிறது. இதனால் இளநீர், மோர், பழ ஜூஸ்கள், கூழ், குளிர்பானங்கள் ஆகியவற்றை மக்கள் நாடுவார்கள். வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் வைத்து அதை குடித்து வருவார்கள். ஆனால் ஏழை, எளிய மக்களுக்கு என்றுமே ‘‘மண் பானை”தான் குளிர்சாதனப் பெட்டி. இதில், தண்ணீர் பருகினால் எந்தவித நோயும் மனிதர்களை தாக்காது. இதனால் ‘‘மண் பானை” தண்ணீரையே மக்கள் பெரிதும் பயன்படுத்துவார்கள். இந்நிலையில், பெரியபாளையம் அருகே உள்ள அகரம், ஆரணி, தண்டலம் மற்றும் ஊத்துக்கோட்டை கலைஞர் தெரு, பேருந்து நிலையம் எதிரில், ஊத்துக்கோட்டை அருகே புதுகுப்பம், பாலவாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள மண் பாண்ட தொழிலாளர்கள் தற்போது கோடை வெயிலுக்காக ‘‘மண் பானைகள்” செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஊத்துக்கோட்டை பகுதியில் மண் பானை செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு