×

சால்வையை தூக்கி எறிந்த சம்பவம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவகுமார்

சென்னை: காரைக்குடியில் நூல் வெளியீட்டு விழாவில் சிவகுமார் கலந்துகொண்டார். விழா முடிந்து வெளியே வந்த சிவகுமாரின் அருகே வந்த முதியவர் அவருக்கு சால்வையை அன்புடன் வழங்கினார். ஆனால், அதை பறித்து தூக்கி எறிந்தார். இதனால் சமூக வலைத்தளத்தில் சிவகுமாருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள், சமூக ஆர்வலர்கள் கோரினர்.

இந்நிலையில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார் சிவகுமார். அதில் சால்வை கொண்டு வந்த முதியவர் கரீம் என்பவருடன் அவரும் அமர்ந்திருந்தார். சிவகுமார் கூறும்போது, ‘இந்த கரீம்தான் நேற்று எனக்கு சால்வை கொடுத்தவர். இவர் எனது இளமைகால நண்பர். இவரது திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன். எனக்கு சால்வை அளிப்பது பிடிக்காது என்பது கரீமுக்கு தெரியும். அப்படி இருந்தும் அவர் சால்வை கொண்டுவந்ததால், கோபப்பட்டு இப்படி செய்துவிட்டேன். பொது இடத்தில் நான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறேன்’ என்றார்.

The post சால்வையை தூக்கி எறிந்த சம்பவம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவகுமார் appeared first on Dinakaran.

Tags : Sivakumar ,CHENNAI ,Karaikudi ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...