×

4 நக்சல்கள் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் ஜங்லா காவல்நிலையத்திற்குட்பட்ட சோட்டே தங்காலி காட்டுப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மாவட்ட ரிசர்வ் போலீசார், சிஆர்பிஎப் வீரர்கள் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சல்கள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து வீரர்கள் கொடுத்த பதிலடியில் 4 நக்சல்கள் கொல்லப்பட்டனர். 4 நக்சல்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post 4 நக்சல்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Raipur ,Sote Tangali forest ,Jungle Police ,Bijapur district ,Chhattisgarh ,District Reserve Police ,CRPF ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் மின்...