புதுடெல்லி: நாடு முழுவதும் 380 நகரங்களில் மே 15 முதல் 31 வரை கியூட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர கியூட் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு மே 15 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் உள்பட 13 மொழிகளில் 26 வெளிநாடு நகரங்கள், மற்றும் நாடு முழுவதும் 380 நகரங்களில் இந்த தேர்வு ஒரு நாளில் இரண்டு அல்லது 3 ஷிப்ட் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. இதற்காக விண்ணபிக்கும் முறை நேற்று தொடங்கியது. மார்ச் 26ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 30ம் தேதி ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது.
The post நாடு முழுவதும் 380 நகரங்களில் மே 15-31 வரை கியூட் தேர்வு: மார்ச் 26 வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.