×

நெல்லை கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான 8 கோடி மதிப்புள்ள நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்


நெல்லை: நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.7.80 கோடி மதிப்புள்ள நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். கொக்கிரகுளம் பகுதியில் 78 செண்ட் நிலத்தில் பாலையா என்பவர் பயன்படுத்தி வந்த நிலையில், அவர் பல ஆண்டுகளாக உபயோக வரியை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனை அடுத்து, விசாரணை நடத்திய அதிகாரிகள் நீதிமன்றம் மூலம் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர். கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.7.80கோடி மதிப்பு நிலம் மீட்கப்பட்டது. கொக்கிரகுளம் பகுதியில் ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள 78 சென்ட் நஞ்சை நிலம் மீட்கப்பட்டது. வருவாய்த்துறை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிலம் மீட்கப்பட்டது.

தமிழ்நாடு எண்ணற்ற புகழ்வாய்ந்த கோயில்களின் இருப்பிடமாகத் திகழ்கிறது. ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது’ என்கிற பொன்மொழிக்கேற்ப கோயில்களைக் காத்து வரும் மரபைப் பெற்றுள்ள மாநிலமாகும். இக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லாமல் மக்கள் கூடும் மையங்களாகவும், பேரிடர் காலங்களில் புகலிடங்களாகவும், மன்னர்களின் மன்றங்களாகவும், வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஆவணங்களாகவும், கல்வியைக் கற்றுத் தரும் பல்கலைக்கழகங்களாகவும், கலைகளைக் காக்கும் காட்சிக் கூடங்களாகவும், மனதை அமைதிப்படுத்தும் தியானக் கூடங்களாகவும் திகழ்ந்தன. இக்கோயில்களின் மூலம் தமிழ்நாட்டின் இடைவிடாத கலைத் தொடர்ச்சியையும் பண்பாட்டு அசைவுகளையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது

பண்டைய மன்னர்கள், பெருங்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் திருக்கோயில்களுக்கு நிலங்களை வழங்கிடவும், கட்டடங்களை எழுப்பியும், தங்கம், வெள்ளி மற்றும் பலவிதமான விலையுயர்ந்த சொத்துக்களையும் மிகப்பெரும் அளவில் நன்கொடையாக வழங்கினர். திருக்கோயில்கள் நீடித்து நிலைபெறத்தக்க வழிபாட்டுத் தலங்களாகவும், பல்லாண்டுகளாக இறையன்பர்களுக்குப் பல்வேறு வசதிகளைச் செய்து தருவதற்கு வாய்ப்பான இடங்களாகவும் இருந்து வருவதற்கு இச்சொத்துக்களே காரணமாக விளங்கி வருகின்றன.

இத்தகைய விலைமதிக்க முடியாத திருக்கோயில்களின் சொத்துக்கள் முறையான பேணுகையுடன் பாதுகாக்கப்பட்டு வருவதுடன், சமயத் தலைவர்கள் கற்பித்துள்ள பல்வேறு மரபுகளையும் நடைமுறைகளையும் கைக்கொண்டு பேணப்படுவதற்கான தேவைகளையும் கருதி, அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தினசரி பூஜை முறைகள், வழிபாடுகள், காலமுறைத்திருவிழாக்கள், திருக்கோயில் புதுப்பிக்க மற்றும் பாதுகாப்புப் பணிகள் ஆகியவை திருக்கோயில்களுக்கென விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுடன் கவனமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பக்தர்களின் இறையுணர்வைப் பெருக்கிடவும், அவர்களுக்கு வேண்டிய வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்து சமய அறநிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆங்காங்கே மீட்கப்பட்டு வருகிறது. கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.7.80கோடி மதிப்பு நிலம் மீட்கப்பட்டது. கொக்கிரகுளம் பகுதியில் ஆட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள 78 சென்ட் நஞ்சை நிலம் மீட்கப்பட்டது. வருவாய்த்துறை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிலம் மீட்கப்பட்டது.

The post நெல்லை கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான 8 கோடி மதிப்புள்ள நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Nella ,Kailasanathar ,temple ,Junction ,Balaiah ,Kokkrakulam ,Nelala Kailasanathar Temple ,Department ,
× RELATED தி.மலை) கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம்...