×

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளதால் இன்று மாலை முதல் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு தடை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளதால் மாலை 5 மணி முதல் பக்கதர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு ஜூலை 28-ந்தேதி தொடங்கினார். இதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை இன்று பல்லடத்தில் யாத்திரையை நிறைவு செய்கிறார். இதற்கான நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறுகிறது.

தமிழகம் வரும் பிரதமர் மோடி இன்று இரவு மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கிறார். இருக்கிறார்கள். அதற்காக ஏற்பாடுகளும், விரிவாக செய்யப்பட்டு இருக்கிறது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, ஐந்து அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக, இன்று தமிழகம் வருகிறார்கள், பிரதமர் மோடி அவர்கள், இன்று மாலை ஐந்து மணிக்கு மதுரை வீரபாண்டியன் கிராமத்தில் உள்ள, TVS லட்சுமி பள்ளி வளாகத்தில் உள்ள. தளத்தில் இறங்கி, இங்கு, ஐந்து, பதினைந்து மணியளவில் பள்ளி வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கக்கூடிய, சிறு, குறு தொழில் முனைவோருக்கான digital செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்று பேசுகிறார்.

அதனைத் தொடர்ந்து, தொழில், சிறு, குறு தொழில் அதிபர்களுடன் அவர் பேசுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு, சாலை மார்க்கமாக, ஆறு நாற்பத்தி ஐந்து மணியளவில், அவர் பசுமலையில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்று அங்கு சிறிது ஓய்வுக்கு பின்பு, உலகப் புகழ் பெற்ற, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுவாமி தரிசனம், செய்ய உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .

தேர்தலின்போது, பிரதமர் மோடி அவர்கள், மதுரை வருகை தந்து, அப்போது, மீனாட்சி அம்மன் கோவிலில், சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார் அதனால், இந்த முறையும் கண்டிப்பாக, அவர், இரண்டாவது முறையாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சாமி தரிசனம் செய்ய, இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை நகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. கண்ணன், போலீஸ் கமிஷனர் லோகநாதன், டி.ஐ.ஜி.க்கள் ரம்யா பாரதி, அபிநவ் குமார் மற்றும் 7 போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை சூப்பிரண்டுகள், 300 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், 8-க்கும் மேற்பட்ட வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

The post மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்ய உள்ளதால் இன்று மாலை முதல் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு தடை appeared first on Dinakaran.

Tags : Modi ,Meenakshi Amman Temple ,Madurai ,temple administration ,Madurai Meenakshi Amman temple ,Tamil Nadu ,BJP ,President ,Annamalai ,Sami ,
× RELATED மக்களவை தேர்தல்: பரப்புரையில்...