×

அரக்கோணம் அருகே பாலை கீழே கொட்டி பா.ம.க. போராட்டம்: சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை

அரக்கோணம்: அரக்கோணம் அருகே நிலவும் மின்வெட்டால் மின்வாரிய அலுவலகம் முன்பாக கெட்டுப்போன பாலை கொட்டி பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகவேடு கிராமத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாகவும் குறைந்த மின்னழுத்ததால் பால் உள்ளிட்ட பொருட்கள் கெட்டுப்போவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அங்குள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று கேட்டு போன பால் கேன்களுடன் திறந்து பாமகவினர் பாலை தரையில் கொட்டினர். உரிய தீர்வுகாண பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக பாமகவினர் குற்றம்சாட்டினர். சீரான மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

The post அரக்கோணம் அருகே பாலை கீழே கொட்டி பா.ம.க. போராட்டம்: சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,BMC ,Nagavedu ,Dinakaran ,
× RELATED பணப் பட்டுவாடாவை ஆதாரத்துடன்...