×

போதையில் மளிகைக் கடையை சூறையாடிய அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது..!!

சென்னை: சென்னை நங்கநல்லூரில் மதுபோதையில் மளிகை கடையை சூறையாடிய அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை நங்கநல்லூரில் உள்ள பாலாஜி நகர், வால்டாஸ் காலனியில் சக்திவேல் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடைக்கு அருகே குடிபோதையில் விழுந்து கிடந்த உள்ளகரத்தை சேர்ந்த அதிமுக வர்த்தக அணி செயலாளர் தனசேகரன் என்பவருக்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்துள்ளார்.

சிறிது நேரத்தில் போதை தெரிந்தவுடன் தனது செல்போனை மளிகை கடை உரிமையாளரான சக்திவேல் திருடிவிட்டதாக கூறி 10 பேர் கொண்ட கும்பலுடன் வந்து அதிமுக பிரமுகர் தனசேகரன் தகராறு செய்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் அதிமுக நிர்வாகியை தடுத்தும் போதை கும்பல் மளிகை கடையை சூறையாடியதுடன் போலீசாரையும் தாக்க முயற்சித்தது சிசிடிவி கட்சியில் பதிவாகியுள்ளது.

அதிமுக நிர்வாகியான தனசேகரன் உள்ளிட்ட 5 பேரை பழவந்தாங்கல் போலீசார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிறுத்தினர் அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களை செய்தியாளர்கள் வீடியோ எடுக்க முயன்ற போது அதிமுக நிர்வாகியின் ஆதரவாளர் சிலர் செய்தியாளர்களை தாக்கி செல்போன்களை பறிக்க முயன்றனர். இதனை அடுத்து பரங்கிமலை காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் புகார் அளித்தனர்.

The post போதையில் மளிகைக் கடையை சூறையாடிய அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nanganallur, Chennai ,Shaktivel ,Balaji Nagar ,Valdas Colony ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...