×

சென்னை விமான நிலையத்தில் பயணி போல் நடித்தவர் கைது: போலி விமான டிக்கெட் மூலம் சுற்றித்திரிந்தது கண்டுபிடிப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணி போல் நடித்தவர் கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தை சேர்ந்த ஷா ஹலாம்(46) இவர் டெல்லியில் தங்கி பணி செய்து வருகிறார். இவர் நேற்றைய தினம் சென்னை சர்வதேச விமானநிலையத்தில் மற்றொரு கோலாலம்பூர் பயணியின் டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு 3 மணிநேரமாக வலம் வந்துள்ளார்.

அவரிடம் உரிய ஆவணங்களில் முத்திரை பதிவு இல்லாததால் போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அவர் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இது போல் பாதுகாப்பான பகுதியில் போலி டிக்கெட் மூலம் எப்படி நுழைந்தார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற பாதுகாப்பு குறைபாடுகளை நீக்க அதிகாரிகளும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

 

The post சென்னை விமான நிலையத்தில் பயணி போல் நடித்தவர் கைது: போலி விமான டிக்கெட் மூலம் சுற்றித்திரிந்தது கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CHENNAI ,Shah Halam ,Bangladesh ,Delhi ,Kuala Lumpur ,Chennai International Airport ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்