×

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு காதலிக்கு வேறொருவருடன் திருமணம் பிளேடால் கழுத்து அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி

அரியலூர், பிப். 27: அரியலூர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இளைஞர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் அடுத்த நல்லாம்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ரகுவரன்(30). லாரி ஒட்டுநரான இவர், பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதையறிந்த ரகுவரன் நேற்று மாணவி படிக்கும் அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று மாணவியை சந்தித்து இது குறித்து கேட்டு உள்ளார். அப்போது திடீரென ரகுவரன் பிளேடால் கழுத்து மற்றும் கைகளை அறுத்துக் கொண்டார். கல்லூரி பேராசிரியர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு காதலிக்கு வேறொருவருடன் திருமணம் பிளேடால் கழுத்து அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Ariyalur Government Arts College ,Ravichandran ,Raghuvaran ,Nallaambatu village ,Laurie ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...