×

ஆந்திராவில் காங்கிரஸ் வாக்குறுதி; ஏழைகளுக்கு மாதம் ₹5,000 : தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் கார்கே

ஆந்திராவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு மாதம் ₹5 ஆயிரம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தலுடன், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நேற்று அனந்தபூரில் தொடங்கி வைத்தார்.

அப்போது காங்கிரஸ் உத்தரவாதத்தை அவர் அறிவித்தார். அதன்படி ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் ஏழைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ₹ 5,000 வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.இது தொடர்பாக கார்கே கூறும்ேபாது,’ இது ஒரு வாக்குறுதி அல்ல, இது ஒரு உத்தரவாதம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், ஏழைகளுக்காக நாங்கள் வாக்குறுதி அளித்து வருகிறோம். ஒவ்வொரு ஏழைக் குடும்பங்களின் வங்கி கணக்குகளில் மாதம் ₹ 5,000 செலுத்தப்படும்’என்றார்.

The post ஆந்திராவில் காங்கிரஸ் வாக்குறுதி; ஏழைகளுக்கு மாதம் ₹5,000 : தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் கார்கே appeared first on Dinakaran.

Tags : Congress ,Andhra Pradesh ,Garke ,Karke ,AP ,Andhra ,
× RELATED குடும்ப செலவுக்கு பணம் கேட்ட மகனை...