×

ஜார்க்கண்ட் காங். எம்பி பாஜவில் சேர்ந்தார்

ராஞ்சி: ஜார்க்கண்ட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கீதா கோடா நேற்று பாஜவில் சேர்ந்தார். ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பும் மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கீதா கோடா. இவர் ராஞ்சியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மாநில பாஜ தலைவர் பாபுலால் மராண்டி முன்னிலையில் நேற்று அந்த கட்சியில் சேர்ந்தார்.

அவர் கூறுகையில்,‘‘ காங்கிரசின் தாஜா செய்யும் அரசியலால் நாட்டிற்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.அனைவருக்கான கட்சி என்று கூறும் காங்கிரஸ் ஒரே ஒரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானதாக உள்ளது’’ என்றார். கீதா கோடாவின் கணவர் மது கோடா. ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுயேச்சை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை காங்கிரஸ்,ஆர்ஜேடி ஆதரவுடன் மாநில முதல்வராக இருந்தார்.

The post ஜார்க்கண்ட் காங். எம்பி பாஜவில் சேர்ந்தார் appeared first on Dinakaran.

Tags : Jharkhand Cong ,BJP ,Ranchi ,Congress ,Geeta Koda ,Jharkhand ,Singhbum ,Lok Sabha ,Babulal Marandi ,Jharkhand Congress ,Dinakaran ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...