×

திருவொற்றியூர் 7வது வார்டில் பழுதடைந்த தெருவிளக்குகள்: சீரமைக்க கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 7வது வார்டுக்குட்பட்ட செல்வகுமரன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. ஒரு சில தெருக்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தெருவிளக்குகளும், மின்கம்பங்களும் பழுதடைந்துள்ளதால், தெருவிளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்த தெருக்களில் இரவில் தனியாக வரும் பெண்களிடம் வழிப்பறி செய்யும் சம்பவங்களும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. எனவே, இந்த தெருக்களில் புதிய கம்பங்களை பொருத்தி தெரு விளக்கை எரிய வைக்க வேண்டும் என்று வார்டு கவுன்சிலர் கே.கார்த்திக், மண்டல குழு கூட்டத்தில் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்நிலையில் அனைத்திந்திய மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பாக்கியம், ஹேமலதா, சித்ரா மற்றும் ஏராளமான பெண்கள் திருவொற்றியூர் மண்டல அலுவலகம் வந்து, தெருவிளக்குகளை சீரமைக்க கோரி மாநகராட்சி, தெரு விளக்கு பிரிவு அதிகாரிகளிடம் கூட்டாக மனு அளித்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனக்கூறினர்.

The post திருவொற்றியூர் 7வது வார்டில் பழுதடைந்த தெருவிளக்குகள்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur 7th Ward ,Thiruvotiyur ,Thiruvotiyur Zone ,Selvakumaran Street ,7th Ward ,Radhakrishnan Street ,
× RELATED வழக்கறிஞர்கள் சாலை மறியல்