×

சிறையில் இருந்து வந்த மறுநாளே மெரினாவில் சிறுவனை கட்டையால் தாக்கி வழிப்பறி செய்த ரவுடி கைது : பொதுமக்கள் பிடித்து உதைத்ததால் பரபரப்பு

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், தனது நண்பர்களுடன் மெரினா காமராஜர் சாலையில் உள்ள நடைபாதையில் நேற்று முன்தினம் இரவு அமர்ந்து பேசி கொண்டிருந்தான். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி வீரா, தனது நண்பர் அஜித்துடன் நடந்து வந்தார். சிறுவர்கள் பேசி கொண்டிருந்ததை பார்த்த ரவுடி வீரா, திடீரென கையில் வைத்திருந்த கட்டையால் சிறுவனை அடித்து அவனிடம் இருந்த செல்போனை பறித்துள்ளார்.

அப்போது சிறுவர்கள் உதவி கேட்டு சத்தம் போட்டனர். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி வீரா மற்றும் அவரது நண்பர் அஜித் ஆகியோரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவலறிந்த மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடம் இருந்து 2 ரவுடிகளை மீட்டு விசாரணை நடத்திய போது, திருட்டு வழக்கில் ரவுடி வீரா சிறைக்கு சென்று கடந்த 24ம் ேததி தான் வெளியே வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ரவுடி வீரா மற்றும் அவரது நண்பர் அஜித் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மெரினா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post சிறையில் இருந்து வந்த மறுநாளே மெரினாவில் சிறுவனை கட்டையால் தாக்கி வழிப்பறி செய்த ரவுடி கைது : பொதுமக்கள் பிடித்து உதைத்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tiruvallikeni Parthasarathi Temple ,Marina Kamarajar Road ,Rowdy Veera ,Marina ,
× RELATED தலைமை செயலாளர் கார் மீது ஆட்டோ மோதி விபத்து