×

10 மாதங்களுக்கு பிறகு இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடையவர் சிக்கினார்

நாலாசோபாரா: இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆசாமி, 10 மாதங்களுக்கு பிறகு போலீசில் சிக்கினார். நாலாசோபாரா பகுதியில் கடை நடத்தி வந்த திவாரிக்கும், நாலாசோபாரா பகுதியைச் சேர்ந்த டீக்கடைக்காரர் துபே என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று திவாரி, தனது நண்பர் கிஷன் ஷாவுடன் துபே கடைக்குச் சென்று தகராறு செய்தார். இதில் ஆத்திரடமைந்த துபே இரும்புக் கம்பியால், திவாரி மற்றும் ஷாவை சரமாரியாக தாக்கினார்.

பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் திவாரி மற்றும் கிஷனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுதொடர்பாக கொலைவழக்குப்பதிவு செய்த போலீசார், திவாரியை வலைவீசி தேடி வந்தனர். தொடர் தேடுதல் வேட்டையின் காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு போலீசார் திவாரியை கைது செய்தனர்.

The post 10 மாதங்களுக்கு பிறகு இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடையவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Nalasopara ,Asami ,Tiwari ,Dubey ,Dinakaran ,
× RELATED தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு...