×

திக்குறிச்சி மகாதேவர் ஆலய பக்கச்சுவர் கட்ட ரூ82 லட்சம் ஒதுக்கீடு: பணியை விரைந்து துவங்க கோரிக்கை

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்னிகோடு, திருநட்டாலம் 12 சிவாலயங்கள் 108 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மஹா சிவராத்திரி அன்று வரலாற்று சிறப்புமிக்க பழமையான இந்த 12 சிவாலயங்களையும் தமிழகம் கேரளாவை சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓடியும், நடந்தும் வாகனங்கள் மூலமாகவும் புனித யாத்திரையாக வந்து கோபாலா, கோவிந்தா என்ற மந்திரத்தை சொல்லியவாறு புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் நடக்கும் இந்த கோயில்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி ஸ்ரீ மஹா தேவர் ஆலயம் தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்ந ஆலயத்தில் சிவராத்திரி, திருவாதிரை, பிரதோஷம், பெளவுர்ணமி போன்ற  விஷேச தினங்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், தினம்தோறும் நூறுக்கும் மேற்பட்ட பக்தர்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் தாமிரபரணி ஆற்றில் பயணம் திக்குறிச்சி பால பணிகள் நடைபெற்ற பிறகு ஆற்றில் ஏற்பட்ட நீரோட்ட மாற்றம் காரணமாக கோயிலின் காம்பவுண்ட் சுவரோடு சேர்த்து கோயிலை சுற்றி மண் திட்டு அமைக்கப்பட்டிருந்தது.இந்த மண் திட்டு தற்போது அரிக்கப்பட்டு காம்பவுண்ட் சுவர் உள்வாங்கி எப்போது வேண்டுமானாலும் இடித்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. இந்த காம்பவுண்ட் சுவர் அருகே பக்கசுவர் கட்டவும், இந்த பகுதியில் உள்ள ஆறாட்டு படி துறையை சீரமைக்கவும் பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்டத்திற்கு கோயில்களுக்கு ஆய்விற்காக வந்த  இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, மாவட்ட ஆட்சியர் அரவிந்த், இந்து அறநிலைய துறை, பொது பணிதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.தொடர்ந்து அதிகாரிகள் திட்ட மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனிடையே பொதுபணித்துறை, இந்து அறநிலைய துறை அதிகாரிகள் 82 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு தாயார் செய்தனர். சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலைய துறை மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதத்தில் 3 முறை வெள்ள பெருக்கால் இந்த காம்பவுண்ட் சுவர் பாதிக்கபட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர். மேற்கொண்டு வரும் வெள்ளபெருக்கில் இருந்து காம்பவுண்டு சுவர் மற்றும் கோயிலை பாதுகாக்க விரைவில் கட்டுமான பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post திக்குறிச்சி மகாதேவர் ஆலய பக்கச்சுவர் கட்ட ரூ82 லட்சம் ஒதுக்கீடு: பணியை விரைந்து துவங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tikurichi Mahadev Temple ,Marthandam ,Tirumala ,Thikurichi ,Tilparapu ,Tirunandikarai ,Ponmanai ,Pannibhagam ,Kalkulam ,Melangodu ,Tiruvidaikodu ,Travanikodu ,Thirupannikode ,Tirunatalam ,Kanyakumari ,Thikurichi Mahadev temple ,
× RELATED மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர்...