×

தூத்துக்குடியில் வாலிபர் தீக்குளிப்பு

தூத்துக்குடி, பிப். 27: தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே நல்லூர், வடக்குத்தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ரூபன்(29). இவர், 10ம் வகுப்பு படித்துள்ளதாக கூறப்படுகிறது. எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததால், இவரது தாயார் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரூபன், நேற்று பிற்பகல் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்புள்ள நெல்லை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில், அரசு வேலை வழங்கக் கோரி பதாகையை பிடித்தபடி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரை அப்பகுதியில் பாதுகாப்பு நின்றிருந்த போலீசார் மீட்டு உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

The post தூத்துக்குடியில் வாலிபர் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Paramasivam ,Ruban ,North Street, Nallur ,Kurumpur, Tuticorin district ,Reuben ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...