×

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 368 மனுக்கள்

நாகர்கோவில், பிப்.27: கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் தர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 368 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் தர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சிகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுப்பையா, டாஸ்மாக் பொது மேலாளர் சங்கரலிங்கம், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 368 மனுக்கள் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Day ,Nagercoil ,Kanyakumari ,District Collector ,Office ,Nanjil Hall ,dhar ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...