×

வாக்காளர் விபரம் கணக்கெடுப்பு பயிற்சி

பாலக்கோடு: தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில், வாக்கு சாவடி முகவர்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களுக்கு, பாலக்கோடு பகுதி வாக்காளர் விபரம் கணக்கெடுப்பு குறித்து விளக்க பயிற்சி நடந்தது. பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, மாவட்ட பொருளாளர் முருகன், மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், பேரூராட்சி தலைவர்கள் முரளி, வெங்கடேசன், முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். இதில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் கலந்து கொண்டு, பாலக்கோடு தொகுதியில் வாக்காளர் விவரங்கள், தெரு வாரியாக, வெளியூர், வெளிபாகத்தில் உள்ள விவரம், மாற்றுத்திறனாளிகளின் விபரம் தொடர்பாக கணக்கெடுக்கும் பணிகள் குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில், வாக்குசாவடி முகவர்கள், ஒன்றிய நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post வாக்காளர் விபரம் கணக்கெடுப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Palakode ,Dharmapuri West District DMK ,Palakode West Union ,Anbazagan ,Dinakaran ,
× RELATED திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்