×

கிரெடாய் நிறுவனம் சார்பில் மார்ச் 8 முதல் 10ம் தேதி வரை ‘ரியல் எஸ்டேட் கண்காட்சி’: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது

சென்னை: இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு – சென்னை மண்டலம் (கிரெடாய்) சார்பில் 16வது ஆண்டாக ‘FIAR PRO 2024’ சொத்து – ரியல் எஸ்டேட் கண்காட்சி அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 10ம்தேதி வரை 3 நாட்கள் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது. இந்த கண்காட்சியை விளம்பர தூதர்களான நடிகைகள் சுஹாசினி மணிரத்தினம் மற்றும் பிரியா பவானி சங்கர் தொடங்கி வைக்கின்றனர். கண்காட்சியின் முன்னோட்டமாக தி.நகர் விஜயா மகாலில் மார்ச் 1 முதல் 3ம் தேதி வரை வீட்டுக் கடன் மேளா நடைபெறுகிறது. அப்போது, இந்த வங்கிகள் வழங்கும் சிறப்பு சலுகைகள் குறித்து தெளிவாக எடுத்துக் கூறப்படும்.

கண்காட்சி குறித்து, நிருபர்களிடம் கிரெடாய் சென்னை மண்டல தலைவர் சிவகுருநாதன் கூறுகையில், ‘FIAR PRO 2024’ என்பது சென்னையின் மிகவும் பிரபலமான ரியல் எஸ்டேட் கண்காட்சி. கிரெடாய் அமைப்பால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தாண்டு கண்காட்சியில் 75க்கும் மேற்பட்ட கிரெடாய் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதுமட்டுமின்றி, ரூ.15 லட்சம் முதல் ரூ.15 கோடி வரையிலான வீடுகள் (சொத்துக்கள்) இதில் இடம்பெற உள்ளன. மேலும் இதில், 8 வங்கிகள் பங்கேற்கின்றன. சென்னையில் இந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட வீடுகளில் 82.6 சதவீத சந்தைப் பங்கை கிரெடாய் உறுப்பினர்கள் பெற்றுள்ளனர் என்றார்.

The post கிரெடாய் நிறுவனம் சார்பில் மார்ச் 8 முதல் 10ம் தேதி வரை ‘ரியல் எஸ்டேட் கண்காட்சி’: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Credai ,Real Estate Fair ,Nandambakkam Trade Centre ,CHENNAI ,Federation of Indian Real Estate Development Associations ,Region ,GREDAI ,FIAR PRO 2024 ,Estate ,Nandambakkam Trade Center ,Dinakaran ,
× RELATED கிரெடாய் நிறுவனம் சார்பில்...