×

ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை விளக்கியும், 2024 நிதிநிலை அறிக்கை சிறப்பம்சங்கள் குறித்தும், வீடுதோறும் சென்று துண்டு அறிக்கை கொடுத்து திண்ணை பிரசாரம் மேற்கொள்வது குறித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நாள் விழா குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ராமமூர்த்தி வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் கனேஷ்பாபு, கட்சி நிர்வாகிகள் முருகன், ஜார்ஜ், சர்தார் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பொறுப்பாளர் உமாகாந்த் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கட்சி நிர்வாகிகள் அரிகிருஷ்ணன், தணிகாசலம், பென்னலூர் யுவராஜ், போஸ்கோ உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur South Union DMK ,Sriperumbudur ,Sriperumbudur South ,Union DMK ,DMK ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கிராமங்களில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு