×

சங்கராபுரம் ஊராட்சியில் அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

வாலாஜாபாத்: சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. வாலாஜாபாத் அடுத்த சங்கராபுரம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை மேகலா தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் வட்டாரக் கல்வி அலுவலர் நந்தாபாய், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம், பொருளாளர் பூபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, தனித்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், கல்வி மேலாண்மைக்குழு முன்னாள் தலைவர் பார்த்திபன், கிராம சமூக ஆர்வலர் மாணிக்கவேலன், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கதிரவன், சாந்தி, பள்ளி ஆசிரியர்கள் மணிமேகலை, சிவசக்தி, செந்தில்குமார், பிரேம்குமார் ரஜினி, அம்பிகா, தனசேகர், ஞானமூர்த்தி உட்பட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post சங்கராபுரம் ஊராட்சியில் அரசுப் பள்ளியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Sankarapuram Panchayat Government School ,Walajahabad ,Shankarapuram panchayat ,Union Middle School ,Walajabad ,headmistress ,Megala ,Sankarapuram Panchayat Annual Celebration ,School ,
× RELATED வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில்...