×

ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் தொண்டநாட்டு அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

பள்ளிப்பட்டு: அம்மையார்குப்பம் தொண்டநாட்டு அம்மன் மற்றும் கன்னியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பத்தில் சிறப்பு பெற்ற தொண்டநாட்டு அம்மன் மற்றும் கன்னியம்மன் திருக்கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு திருக்கோயில் மற்றும் கிராம வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை மஹாபூர்ணாஹூதி ஹோம பூஜைகள் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனிதநீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்று திருக்கோயில் சுற்றி பெருந்திரளான பக்தர்கள் கூடியிருக்க ஆலய கோபுர கலசத்திற்கு புனிதநீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், முன்னாள் திமுக பொறுப்பாளர் பூபதி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி தலைவர் சி.எம்.இரவி, ஒன்றிய திமுக செயலாளர்கள் சண்முகம், பழனி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் தொண்டநாட்டு அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Ammaiyarkuppam Thondanatu Amman Temple ,RK Pettah ,Kumbabhishekam ,Pallipattu ,Ammaiyarkuppam Thondanatu Amman ,Kanniyamman Temple ,Kumbabhishek ,Thiruvallur District ,Thondanatu Amman and Kanniyamman Temple ,RK Pettai ,Ammaiyarkuppam ,Ammaiyarkuppam Thondanatu Amman Temple Kumbabhishekam ,
× RELATED சசிகலா அணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கவுன்சிலர்கள்