×

எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இதில் செம்பேடு கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம் பழுது பார்த்தல் பணிக்கு ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 481, மாம்பள்ளம் ஊராட்சி பள்ளி தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் பணி ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 411 ஒதுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

The post எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Ellapuram Union Councilors ,Oothukottai ,Ellapuram ,councilors ,Periyapalayam ,Tiruvallur district ,Union Committee ,President ,Ramesh ,Vice President ,Suresh ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்