×

திருவள்ளூரில் பட்டப்பகலில் 15 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் வரதராஜன் நகர் சோழன் தெருவை சேர்ந்தவர் அமேதாடான் போஸ்கோ(59). இவர் சென்னை கலெக்டர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்தான லட்சுமி(55). இவர் மாவட்ட தொழில் மையத்தில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சந்தான லட்சுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

மாலை மருத்துவ சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்து பார்த்த போது முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 15 சவரன் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி கீர்த்திகா(28) இவர் நேற்று 25ம் தேதி காலை வீட்டை பூட்டிக் கொண்டு அருகில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.20,000 கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து மணவாள நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவள்ளூரில் பட்டப்பகலில் 15 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : 15 Sawaran ,Tiruvallur ,Amethadan Bosco ,Cholan Street, Varadarajan Nagar ,Periyakuppam, Thiruvallur ,Adi Dravidar Welfare Department ,Chennai Collectorate ,Santana Lakshmi ,Thiruvallur ,Sawaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு