×

தடிப்புச்சொறி தவிர்ப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர்

தோல் படைகள் சிவப்பாகவும் சில சமயம் அரிக்கும் புடைப்புகளாகவும் இருக்கும். பொதுவாக இது ஒரு மருந்து அல்லது உணவு ஒவ்வாமையால் உண்டாகும் எதிர்வினையால் ஏற்படுகிறது. ஒவ்வாமை எதிர்வினையின் காரணமாக உடல் வேதிப்பொருட்களை வெளிவிடுவதால் தோல் புடைப்புகளாக வீங்குகிறது. பிற ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட புடைப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தொற்று அல்லது மன அழுத்தம் பிற காரணங்களில் அடங்கும்.

கடும் தடிப்புச்சொறி

ஆறு வாரத்திற்குள் முழுமையாக மறைந்துபோகும் வீக்கம், கடும் தடுப்புச் சொறி எனப்படும். ஒவ்வாமை உண்டாக்கும் பொருளை எதிர்கொண்ட சில நிமிடங்களிலேயே கடும் தடிப்புச்சொறி உடனடியாக வெளிப்படும். இது பல வாரங்கள் நீடிக்கலாம். ஆனால் பொதுவாக ஆறு வாரத்தில் தடிப்புகள் மறைந்து போகும்.

நீடித்த தடிப்புச்சொறி

(சாதாரணத் தடிப்புச்சொறி) ஆறு வாரத்திற்கும் மேல் நீடிக்கும் வீக்கம் நீடித்தத் தடிப்புச்சொறி எனப்படும். சில கடுமையான நீடித்த நோய் 20 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்துள்ளது.

நோயறிகுறிகள்

தோல் படைகள் சிவப்பாகவும் சிலசமயம் அரிக்கும் புடைப்புகளாகவும் இருக்கும். பொதுவாக இது ஒரு மருந்து அல்லது உணவு ஒவ்வாமையால் உண்டாகும் எதிர்வினையால் ஏற்படுகிறது. ஒவ்வாமை எதிர்வினையின் காரணமாக உடல் வேதிப்பொருட்களை வெளிவிடுவதால் தோல் புடைப்புகளாக வீங்குகிறது. பிற ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட புடைப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தொற்று அல்லது மனல்அழுத்தம் பிற காரணங்களில் அடங்கும்.

வகைப்படுத்தல்

கடும் தடிப்புச்சொறி: ஆறு வாரத்திற்குள் முழுமையாக மறைந்து போகும் வீக்கம், கடும் தடுப்புச் சொறி எனப்படும். ஒவ்வாமை உண்டாக்கும் பொருளை எதிர்கொண்ட சில நிமிடங்களிலேயே கடும் தடிப்புச்சொறி உடனடியாக வெளிப்படும். இது பல வாரங்கள் நீடிக்கலாம். ஆனால் பொதுவாக ஆறு வாரத்தில் தடிப்புகள் மறைந்துபோகும்.

நீடித்த தடிப்புச்சொறி: (சாதாரணத் தடிப்புச்சொறி) ஆறு வாரத்திற்கும் மேல் நீடிக்கும் வீக்கம் நீடித்தத் தடிப்புச்சொறி எனப்படும். சில கடுமையான நீடித்த நோய் 20 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்துள்ளது.

காரணங்கள்

தோலின் அடிப்பகுதியில் ஹிஸ்டமினும் பிற வேதிப்பொருட்களும் வெளிப்படுவதால் திசுக்கள் வீங்கி தடிப்புச்சொறி உண்டாகிறது.

சில ஆபத்துக் காரணிகள்

வேர்க்கடலை, சிப்பிமீன், முட்டை, பாலாடைக்கட்டி போன்ற உணவுப்பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை எதிர்வினை

மகரந்தப்பொடி, தூசிப்பூச்சிகள் அல்லது வேதிப்பொருட்கள் போன்ற சூழலியல் காரணிகளால் ஏற்படும் ஒவ்வாமை எதிர்வினை

சுகாதாரப் பணியாளர்களுக்கு பொதுவான பிரச்சினையாக இருக்கும் மரப்பால் ஒவ்வாமை எதிர்வினை

சாதாரணச் சளியில் இருந்து ஆபத்தான எச்.ஐ.வி. வரையுள்ள தொற்று நோய்கள்

பூச்சிக்கடியும் கொட்டும் உணர்வுபூர்வமான அழுத்தம்

நுண்ணுயிர்க்கொல்லிகள், ஊக்கமருந்துகள் அல்லாத எதிரழற்சி மருந்துகள், ஆஸ்பரின், ஆண்டிஹிஸ்டமின்கள் போன்ற சில மருந்துகளினால் உண்டாகும்

பக்க விளைவுகள்

தோலில் அழுத்தம், வெப்பநிலை மாற்றம், சூரியஒளி, உடற்பயிற்சி, தண்ணீர் போன்ற புறத்தூண்டிகள்

நோய் கண்டறிதல்

தோலில் காணப்படும் சொறியைக் கொண்டே தடுப்புச்சொறி பொதுவாகக் கண்டறியப்படுகிறது. ஒவ்வாமைக் காரணிகளையும் உட்கொள்ளும் மருந்துகளைப்பற்றியும் மருத்துவர் வினவலாம்.

சிக்கல்கள்

அறிந்த ஒவ்வாமை ஊக்கிகளைத் தவிர்க்கவும்: சில உணவுகள், உணவில் சேர்க்கப்படுபவை, மது, மருந்துகள், அல்லது மிக அதிகமான தட்பவெப்ப நிலை போன்ற சூழல்கள், இறுக்கமான உடைகள், உணர்வு அழுத்தங்கள் போன்றவை இதில் அடங்கும்.ஒரு நாட்குறிப்பை வைத்துக்கொள்ளவும்: உங்கள் செயல்பாடுகள், எப்போது எங்கு தடிப்பு ஏற்பட்டது, என்ன சாப்பிட்டீர்கள் என்பன போன்றவற்றைத் தொடர்ந்து கவனிக்கவும். இதன்மூலம் நீங்களும் உங்கள் மருத்துவரும் ஒவ்வாமை ஊக்கிகளைக் கண்டறியலாம்.

தடிப்புச்சொறியை உண்டாக்கும் மருந்துகளைத் தவிர்க்கவும்: இதில் ஆஸ்பரின், இபுபுரூபன் (அட்வில், மோட்ரின், பிற), நேப்ராக்சன் சோடியம் (அலீவ். அனப்ராக்ஸ், பிற), கோடின் அல்லது தடிப்பை உண்டாக்கும் என நீங்கள் கண்டறிந்த வேறு மருந்துகள் அடங்கும்.

தடுப்புமுறைகள்

அறிந்த ஒவ்வாமை ஊக்கிகளைத் தவிர்க்கவும்: சில உணவுகள், உணவில் சேர்க்கப்படுபவை, மது, மருந்துகள், அல்லது மிக அதிகமான தட்பவெப்ப நிலை போன்ற சூழல்கள், இறுக்கமான உடைகள், உணர்வு அழுத்தங்கள் போன்றவை இதில் அடங்கும்.ஒரு நாட்குறிப்பை வைத்துக்கொள்ளவும்: உங்கள் செயல்பாடுகள், எப்போது எங்கு தடிப்பு ஏற்பட்டது, என்ன சாப்பிட்டீர்கள் என்பன போன்றவற்றைத் தொடர்ந்து கவனிக்கவும். இதன்மூலம் நீங்களும் உங்கள் மருத்துவரும் ஒவ்வாமை ஊக்கிகளைக் கண்டறியலாம்.

தடிப்புச்சொறியை உண்டாக்கும் மருந்துகளைத் தவிர்க்கவும்: இதில் ஆஸ்பரின், இபுபுரூபன் (அட்வில், மோட்ரின், பிற), நேப்ராக்சன் சோடியம் (அலீவ். அனப்ராக்ஸ், பிற), கோடின் அல்லது தடிப்பை உண்டாக்கும் என நீங்கள் கண்டறிந்த வேறு மருந்துகள் அடங்கும்.

சிகிச்சை

பொதுவாக அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது. இதில் அடங்கும் பல மருந்துகளாவன: ஆண்டிஹிஸ்டமின்கள்: செட்டிரிசின் (Cetirizine), ஃபெக்சோஃபெனடின் (Fexofenadine) லோராட்டாடைன் ( Loratadine) போன்ற மருந்துகள்.கார்ட்டிகோஸ்டெராய்டு மாத்திரைகள்: ப்ரெட்னிசோலோன் (prednisolone) போன்ற மருந்துகள்.

தொகுப்பு: லயா

The post தடிப்புச்சொறி தவிர்ப்போம்! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED என் ஓவியங்கள் பெண் சமுதாயத்திற்கான கேள்விக்கணை!