×

மதுரை கோயில் அருகே கட்டடம்: அறிக்கை தர ஆணை

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் 10 ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரிகள் என்ன செய்தார்கள்?. மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி கட்டடங்கள் கட்ட மாநகராட்சி நிர்வாகம், உள்ளூர் திட்டக்குழுமம் கொடுத்த அனுமதி எத்தனை? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் விதிமீறல் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது . மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கடந்த 2011ம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான அறிக்கையை ஏப்ரல் 4க்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

The post மதுரை கோயில் அருகே கட்டடம்: அறிக்கை தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Madurai Temple ,Madurai ,ICourt branch ,Madurai Meenakshiyamman ,temple ,Meenakshiyamman temple ,
× RELATED தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட...